காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கல்லூரி நிர்வாகமும்,இன்போசிஸ் நிறுவனமும் வியாழக்கிழமை செய்து கொண்டன.
கணினி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனமும்,காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகமும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மென்பொருள் மற்றும் நுண்திறன் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்ததினை செய்து கொண்டன.
இந்த ஒப்பந்தத்தில் கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசனும்,இன்போசிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவருமான திருமலா அரோகியும் கையெழுத்திட்டனர்.இதன் பின்னர் கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் கூறியது..
மாணவர்களின் திறன் வளர்ச்சிக்காகவும்,வேலைவாய்ப்புக்களை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே உறுதி செய்யும் வகையில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
பல நிறுவனங்களுடன் மாணவர்களது திறன் பயிற்சிக்காக ஒப்பந்தப்பங்கள் போடப்பட்டு அதற்கேற்பவும் வகுப்புகள் நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக இன்போசிஸ் நிறுவனத்தோடும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின் மூலம் கல்லூரி பேராசிரியர்கள்,மாணவர்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். நிகழ்வின் போது கல்லூரியின் பேராசிரியர்கள்,மாணவர்கள் பலரும் உடன் இருந்தனர்.