Close
ஜனவரி 24, 2025 1:14 மணி

இரு மதங்கள் இடையே நல்லிணக்கம் ஏற்பட பேச்சுவார்த்தைக்கு தயார்..! எம்.பி., நவாஸ் கனி..!

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.பி., நவாஸ் கனி

மதுரை :

பொய்யான தகவல்களை பரப்பி சமூகத்தில் பதட்டத்தை உண்டு பண்ணுகின்ற எச். ராஜா, அண்ணாமலை கைது செய்யப்பட வேண்டும் என்று எம் பி நவாஸ் கனி பேட்டி அளித்தார்.

ஐபிஎஸ் படித்துவிட்டு பொய்யாக பேசிக் கொண்டிருந்த அண்ணாமலை தற்போது லண்டன் சென்று படித்து மீண்டும் உண்மைக்கு புறம்பாக போய் அதிகமாக பேசுகிறார் என்று நவாஸ் கனி எம். பி. கூறினார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் :-

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதை அடுத்து மதுரை மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து விட்டு தர்காவிற்கு செல்பவர்களுக்கு எந்த மாதிரி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றோம்.

சமைத்த உணவை கொண்டு செல்வதற்கு அனுமதி உண்டு. ஆடு, கோழிகளை கொண்டு செல்வதற்கு தற்காலிக தடை என்று சொன்னார்கள். நாங்கள் காவல் ஆணையரிடம் ஏற்கனவே நடைமுறை உள்ளதை அனுமதியுங்கள் என்றோம். அதற்கு அவர்கள் நாங்கள் சென்று ஆய்வு செய்கிறோம். அது நடைமுறையில் இருந்தால் அதை நாங்கள் அனுமதிக்கிறோம் என்று சொன்னார்கள்.

நேற்றைய தினம் வருவாய் துறையினர் அங்கு சென்று ஆடு சமைக்கும் இடம் போன்றவற்றை ஆய்வு செய்தனர். மலை மீது பிரியாணி சாப்பிட்டதாக நவாஸ் கனி மீது அண்ணாமலை கண்டனம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு:

மத நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாக எம்.பி.செயல்பட்டார் அவர் பதவி விலக வேண்டும் என்று சொல்லியிருந்தார் . நான் கேட்கிறேன் கூட்டத்தை கூட்டிக் கொண்டு நான் அங்கு சென்று பிரியாணி சாப்பிட்டேன் என்று நிரூபிக்காவிட்டால் அவர் பதவி விலகுவாரா?

நான் கூட்டத்தை அழைத்துச் சென்று பிரியாணி சாப்பிட்டதை நிரூபித்து விட்டால் நான் பதவி விலக தயார். அவர் சொன்ன குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் தமிழக பாஜக தலைவரின் பொறுப்பில் இருந்து பதவி விலக வேண்டும். தொடர்ந்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பொய்களை சொல்பவர் அண்ணாமலை ஐபிஎஸ் படித்துவிட்டு பொய் சொல்லுகிறார்.

இப்போது, லண்டனில் படித்து தேர்ச்சி பெற்று விட்டு எல்லோரும் நம்பும்படியான பொய் சொல்கிறார். அந்த மலைமேல் உள்ள தர்கா வக்பு வாரியத்திற்கு சொந்தமானது. மணப்பாறை எம்.எல்.ஏ.வக்பு வாரிய உறுப்பினர். நான் வக்பு வாரிய தலைவர். அந்த தர்காவிற்கு சொல்லக்கூடியவர்களுக்கு என்ன வசதிகள் குறைபாடுகள் உள்ளது என்பதைக் கேட்டு தெரிந்து அதை அரசிடம் தெரிவிக்கும் பொறுப்பு எங்களிடம் உள்ளது.

இரு மத நல்லிணக்கம் ஏற்பட இது தொடர்பாக கமிட்டி அமைத்து பேச்சுவார்த்தை நடத்துவீர்களா என்ற கேள்விக்கு:

நிச்சயமாக எங்களுடைய கட்சியும் அதுதான் மத நல்லிணக்கத்திற்காகவும் , சுதந்திரத்திற்காக சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாறு தமிழ்நாட்டில் உள்ளவருக்கு எல்லாத்துக்கும் தெரியும் .

பாரதிய ஜனதாவின் வரலாறும் தெரியும். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.ஒரு எம்.பி.அங்கு போய் பிரியாணி சாப்பிடலாமா முதலில் தர்காவிற்கு செல்பவர்கள் பிரியாணி சாப்பிடுகிறார்களா/ சைவம் சாப்பிடுகிறார்களா என்று இவர்கள் ஏன் கேட்கிறார்கள்.

அவர்கள் கோவிலுக்கு போகவில்லை கோவில் வளாகத்திற்கு செல்லவில்லை காவல்துறை ஆடு கோழிகளை கொண்டு செல்வது தான் தடை. சமைத்த சாப்பாடு கொண்டு செல்வதற்கு தடை இல்லை என்று சொன்னார்கள் அதைத்தான் அவர்கள் சாப்பிட்ட புகைப்படத்தை பகிர்ந்தார்கள் .

நானும் அதை பகிர்ந்தேன் இது காவல்துறை அனுமதித்த செயல் அனுமதியை மீறி யாரும் அங்கு செல்லவில்லை. இதைப் பற்றி எந்த கட்சியும் பேசவில்லை இவர்கள் மட்டும் தான் பேசுகிறார்கள் அரசியல் செய்வதற்காக பிரிவினை ஏற்படுத்த வேண்டும் ஒற்றுமையை குழைக்க வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம் . அங்கு நடப்பது மதுரை மக்களுக்கு தெரியும் மணப்பாறை எம்.எல்.ஏ.

எம். பி. கைது செய்யப்பட வேண்டும் எச். ராஜா கூறியது குறித்த கேள்விக்கு ?

ஒரு எம்எல்ஏவும் எம்பியும் ஆய்வு செய்யக் கூடாது என்று சொல்வதற்கு அவர்கள் யார்? வக்பு வாரியத்திற்க்கு சொந்தமாக இருக்கக்கூடிய தர்காவிற்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாங்கள் அதை ஆய்வு செய்து அரசிடம் சொல்ல வேண்டும்.

பொய்யான தகவல்களை சொல்லுகின்ற சமூகத்தில் பதட்டத்தை உண்டு பண்ணுகின்ற இவர்களை கைது செய்ய வேண்டும். அண்ணாமலை, எச். ராஜா போன்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

டங்ஸ்டன் தொடர்பான கேள்விக்கு:

தமிழக அரசுக்கு அடிபணிந்து தான் அந்த திட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். அதை அவர்கள் அறிவித்திருந்தாலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தவிட மாட்டோம் என்று அறிவித்தது தமிழக அரசுதான் என்று ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கூறினார.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top