இரண்டாவது பசுமை விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டக் குழுவினரை இந்திய ஜனநாயக கட்சி மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.
முதன்முதலாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்ததில் மகிழ்ச்சி என அப்பகுதியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ளது.
இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 913 நாட்களாக போராட்ட குழுவினர் பல்வேறு வடிவங்களில் தங்கள் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்து வந்த நிலையில் தற்போது இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தரின் அறிவுரையின் பேரில், தலைவர் ரவி பச்சமுத்து உத்தரவின் பேரில் மாநில விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வன் மாநில கொள்கை பரப்பு செயலாளர் நெல்லை ஜீவா உள்ளிட்ட 5 பேர் கொண்ட ஐஜேகே உயர்மட்ட குழுவினர் இன்று ஏகனாபுரம் கிராம போராட்ட குழுவினரை நேரில் சந்தித்தனர்.
இந்த ஆலோசனை என்பது போராட்டக் குழுவின் செயலாளர் சுப்பிரமணி போராட்டங்கள் குறித்தும் தங்களின் எதிர்ப்புக்கான காரணங்களையும் புள்ளி விவரங்களுடன் ஐஜேகே நிர்வாகிகளுக்கு விளக்கினர்.
இதனைத் தொடர்ந்து ஐஜேகே மாநில விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வன் மற்றும் மாநிலக் கொள்கை பரப்பு செயலாளர் நெல்லை ஜீவா ஆகியோர் தங்களது கட்சியின் ஆதரவையும் தெரிவித்து அதற்கான அனைத்து போராட்டங்களிலும் முன் நின்று செயல்படுவோம் எனவும் அவர்களுக்கு உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய கூட்டமைப்பின் செயலாளர் சுப்பிரமணி, பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விவசாயிகளின் நலன் காக்க வேண்டும் என முதல் முதலாக பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தவர் ஐ ஜே கே தலைவர் டாக்டர் பாரிவேந்தர் எனவும் அவருக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய முத்தமிழ் செல்வன், ஐ ஜே கே நிறுவனர் மற்றும் மாநில தலைவரின் ஆலோசனையின் பேரில் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினரை சந்தித்ததாகவும் அவர்களுக்கு ஐஜேகேவின் ஆதரவு என்றும் துணை நிற்கும் எனவும், விரைவில் ஐ ஜே கே வின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் போராட்ட குழுவினர் ஏகனாபுரத்தில் சந்திக்க திட்டம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில இளைஞரணி துணை செயலாளர் நஞ்சப்பன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் இளவரசி, காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர் சிவன்கோவில். கார்த்திக் மற்றும் மணிகண்டன் சதீஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்