விமான நிலைய திட்டத்திற்கு நிலம் வழங்கும் பயனாளிகளுக்கு அடுத்த மாதம் இழப்பீட்டுத் தொகை வழங்க உள்ள நிலையில் அதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது..
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ளது.
இதற்காக சிறப்பு நிலை எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நான்கு மண்டலங்களை நியமிக்கப்பட்டு அதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் கடந்த மூன்று மாத காலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்ட குழுவினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொது மக்களுக்கு எந்தவித இடையூறு இல்லாமல் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்த நிலையில் அடுத்த மாதம் முதல் நிலம் தருபவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை தரும் பணிகள் துவக்க முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையினை இறுதி செய்யும் பணிகளும் சில நபர்களுக்கு இறுதி செய்யப்பட்டு வருகிறது.
அவ்வகையில் நெல்வாய் கிராமத்தில் இன்று நில அளவையர் வட்டாட்சியர் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் உள்ள நபர்களின் பட்டியலை கொண்டு இறுதி செய்து வரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.