Close
ஜனவரி 24, 2025 7:51 மணி

காஞ்சியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் : ஆட்சியர் வழங்கல்..!

விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர் கலைச்செல்வி

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளுக்கு  ரூ.5.95  இலட்சம் மதிப்பிலான பயிர் கடன், கால்நடை பராமரிப்புக் கடன் மற்றும் மானியத்துடன் கூடிய வேளாண் இடுபொருள் வழங்கல்..

காஞ்சிபுரம் மாவட்டத்தில்,  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு  மைய  கூட்டரங்கில்,  நடைபெற்ற  விவசாயிகள்  நலன்  காக்கும்  நாள்  கூட்டம்  மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில்   நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்  வேளாண்மை துறை,  வேளாண் பொறியியல் துறை, தோட்டக் கலைத் துறை,  கூட்டுறவுத் துறை,  வருவாய்த் துறை,  ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் இந்த  கூட்டத்தில்  கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள்  விவசாயிகளுக்கு வழங்கினர்.

மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

இன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும்  நாள்  கூட்டத்தில், வேளியூர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 5 விவசாய பயனாளிகளுக்கு ரூ.4,03,650/- மதிப்பிலான பயிர்க்கடன்களும், முத்தியால்பேட்டை கூட்டுறவு சங்கத்தின் மூலம் 4 விவசாய பயனாளிகளுக்கு ரூ.1,62,000/- மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புக் கடன்களும், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ் 2 விவசாய பயனாளிகளுக்கு ரூ.11,000/- மதிப்பிலான மண்புழு உரப்படுக்கை,

மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் (SADS) 2 விவசாய பயனாளிகளுக்கு ரூ.2,197/- மதிப்பிலான உளுந்து தொகுப்பு, ஜிங் சல்பேட் உரம் மற்றும் நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் 1 விவசாய பயனாளிகளுக்கு ரூ.16, 240/- மதிப்பிலான நுண்ணீர் பாசன செயலாணையும் என மொத்தம்  ரூ5,95,087/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர்  கலைச்செல்வி வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ்,  துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குநர் முருகன்  மற்றும் அரசு அலுவலர்கள்,  விவசாய  பெருமக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top