அரசு பள்ளி மாணவிகளின் தேர்தல் விழிப்புணர்வு கற்பனைத் திறன் பொம்மலாட்ட நிகழ்ச்சி கண்டு வியந்த அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் !!!
15வது தேசிய வாக்காளர் தினம் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2011 முதல் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் அன்று வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் இன்று கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் சிறப்பு முகாம்களில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், சார் ஆட்சியர் ஆஷிக்அலி உள்ளிட்டூர் பங்கேற்று அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது ஏகனாம் பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 9 ம் வகுப்பு மாணவிகள் மோனிஷா , ஹரிணி, நிவேதா, தமிழ்ச்செல்வி, பிரியதர்ஷினி ஆகியோர் அழிந்து வரும் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டின் நிகழ்ச்சிகளின் மூலம் இன்று வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
இந்நிகழ்ச்சிகளில் அனைவரும் வாக்களிப்பது கட்டாயம் எனவும் வாக்களிக்க பணம் வாங்க மாட்டோம் எனவும் தங்களது ஜனநாயக கடமையை உரிய முறையில் ஆற்றுவோம் உள்ளிட்ட விழிப்புணர்வு கொண்டு நாடகம் நடத்தி அனைவரின் பாராட்டுகளை பெற்றனர்.
அரசு பள்ளி மாணவர்களின் கற்பனை திறன் மற்றும் வார்த்தைகள் என அனைத்தும் சிறப்பாக இருந்த நிலையில் அரங்கமே அவர்களுக்கு தெரிவித்தது.