Close
ஏப்ரல் 16, 2025 6:58 காலை

மதுரை மாநகராட்சியில் புதிய தார்சாலையை மேயர் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்..!

புதிய தார் சாலை திறப்பு

மதுரை :

ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலையை மேயர் இந்திராணி பொன்வசந்த் , பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 செல்லூர் பகுதியில் (60 அடி சாலை) புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினை மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் ச.தினேஷ் குமார், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி ஆகியோர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.

மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளான புதிய சாலைகள், மழைநீர் வடிகால்கள், பள்ளி கூடுதல் வகுப்பறைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், நல வாழ்வு மையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்களில் கூடுதல் கட்டிடங்கள், சமுதாய கூடங்கள், உள்ளிட்ட பல்வேறு பணிகள் சிறப்பாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.23 மற்றும் 27 க்கு உட்பட்ட 60 அடி ரோடு பிரதான சாலையானது செல்லூர் குலமங்கலம் ரோடு மற்றும் நரிமேடு மெயின் ரோடுகளை இணைக்கும் பிரதான சாலை ஆகும். 15 CFC & NSMT திட்டத்தின் கீழ் ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் 897.30 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் புதிய தார்ச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினை , மேயர், ஆணையாளர், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, உதவி ஆணையாளர் கோபு, செயற்பொறியாளர் சேகர், உதவி செயற் பொறியாளர் காமராஜ், இளநிலை பொறியாளர் பாண்டிக்குமார், மாமன்ற உறுப்பினர்கள் குமரவேல், மாயத்தேவன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top