100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாக வாடிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய சங்க கூட்டத்தில் பாரதிய கிஷான் சங்க மாநில தலைவர் புகார்:
சோழவந்தான்:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய பாரதிய கிசான் சங்க மாநில தலைவர் பார்த்தசாரதி பேசுகையில்
கிராமப் பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தால் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும் கவலைப்பட்டதாக தெரியவில்லை ஆகையால் 100 நாள் பணிகளுக்கு வரும் பணியாட்களை விவசாய வேலைகள் செய்ய அறிவுறுத்த வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் இல்லையென்றால் வருங்காலங்களில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் விவசாயம் அழியும் நிலைக்கு தள்ளப்படும் என்று கூறினார்
இதுகுறித்து பார்த்தசாரதி கூறுகையில்
இந்த பகுதியில் விவசாயம் பண்ணுவதே மிக கடினமாக உள்ளது ஏற்கனவே விவசாயம் சார்ந்த விஷயங்களுக்காக சட்டம் கொண்டு வந்ததாக போலியாக விவசாயிகளை அரசாங்கம் ஏமாற்றி வருகிறது இரண்டாவது பருவ சூழல் காரணமாக நெல் அனைத்தும் மிகப்பெரிய அளவு பாதிக்கப்பட்டுள்ளது பாதிப்பு பற்றி அரசாங்கம் எந்த ஒரு கவலையும் பட்டதாக தெரியவில்லை அது குறித்து எந்த கருத்தும் சொல்லாமல் கடந்து போய்க் கொண்டிருக்கிறது
அதே மாதிரி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிக்கப்பட்டு இருக்கும் நெல்லை சரியான முறையில் கையாலாமல் நெல் தரம் இழந்து கொண்டு இருக்கிறது
இதெல்லாம் போக இன்னைக்கும் கூட ஒருபோகம் அறுத்து இருந்தால் அதில் பல சிரமங்கள் ஏற்பட்டிருக்கும் அந்த சிரமங்களின் அடிப்படையில் பார்த்தால் நாங்கள் நட்டுஇருக்கவே கூடாது இருந்தாலும் விமோசனம் கிடைக்கும் பழக்க தோஷத்தில் நட்டு இருக்கிறோம்
களை எடுப்பதற்கு ஆள் பற்றாக்குறை எல்லா கிராமங்களிலும் உள்ளது கிராமங்களில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த விவசாய தொழிலாளர்களையும் 100 நாள் வேலை என்று ஊருக்குள் அடைத்து வைத்துக் கொண்டு விவசாய வேலை அவர்கள் பார்ப்பதற்கு அரசாங்கமே தடையாக இருக்கிறது
இதுகுறித்து வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களை நேரில் போய் சந்தித்து கேட்டபோது நாங்கள் என்ன செய்வது 100 பேர் பார்க்க வேண்டிய பணிகளுக்கு இன்னும் 150 ஆட்கள் தேவைப்படுகிறது என்று கூறுகிறார்
100 நாள் வேலைக்கு அந்த மாதிரி 150 பேர் வேலை பார்த்து என்ன உற்பத்தி செய்கிறார்கள் இந்தியா வந்து உலகத்தின் உணவு தானியத்தில் முன்னணியில் இருக்குன்னா
அதற்கு காரணம் இங்கு உள்ள விவசாயம்தான் விவசாயிகளோட உழைப்பு அதெல்லாம் போக நடுத்தர வேலையாட்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
அந்த வேலையாட்களை எல்லாம் முழுமையாக அரசாங்கம் சம்பளத்தையும் கொடுத்துவிட்டு வேலை செய்ய விடாமல் தடுப்பது எந்த வகையில் நியாயம் தண்ணீர் இல்லையென்றால் வறட்சி என்று அறிவித்து நிவாரணம் தரப்போகுது நோய் தாக்கினால் புகையான் வறட்சி என்று அறிவித்து நிவாரணம் வாங்கிய காலம் உள்ளது
இன்றைக்கு ஆள் இல்லாத நிலையையும் ஒரு டிசாஸ்டர் தட்டுப்பாடு அரசு ஏற்படுத்தப்பட்ட தட்டுப்பாடு என்று உள்ளது
அதை கருத்தில் கொண்டு கை விதைப்பு விதைத்ததன் மூலம் போதிய அனுபவம் இல்லாமல் நெருக்கி விதைத்ததால் அதிகப்படியான நோய்வாய்ப்பட்டு விளைச்சல் இழந்து ஏக்கருக்கு அஞ்சு மூடை ஆறு மூடை எடுத்து இருக்காங்க இப்போது கூட களை எடுக்காமல் பல இடங்களில் தண்ணீர் இருந்தும் கூட பயிரை
கைவிட வேண்டிய சூழ்நிலை இருக்கு
உடனடியாக 100 நாள் வேலை ஆட்களை பகிர்ந்து விவசாயத்திற்கு அளிக்க வேண்டும் அல்லது வேலைவாய்ப்பு இல்லாத பற்றாக்குறையை ஒரு டிசாஸ்டர் ஆக கருதி எங்களுக்கு நிவாரணம் வழங்க கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு
கூறினார்.