பட்டு சேலை நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியினை வங்கி பரிமாற்றம் இல்லாமல் ரொக்கமாக வழங்க கோரி நெசவாளர்கள் இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்..
பட்டு நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் நகரில் ஏராளமான பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது.
இச்சங்கங்களில் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்கள் தங்கள் பதிவு செய்து கொண்டு நெசவு செய்து அதனை கூட்டுறவு சங்கங்களில் அளித்து அதற்கான கூலியை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கைத்தறி துணி நூல் இணை இயக்குனர் இன்று முதல் பட்டு கூட்டுறவு சங்கங்களில் நெசவு செய்து அளிக்கப்படும் உறுப்பினர்களுக்கு பணம் ரொக்கமாக தரப்படாது எனவும் அது வங்கி பரிவர்த்தனை மூலமே அளிக்கப்படும் என சுற்றறிக்கை அளிக்கப்பட்டு இன்று முதல் அதனை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நெசவாளர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததுள்ளது. இந்நிலையில் காமாட்சியம்மன் பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நெசவாளர்கள் சிஐடியு சங்க உறுப்பினர்கள் என பல இதனை கண்டித்து காஞ்சிபுரம் பங்காரு அம்மன் காலனியில் உள்ள கைத்தறி துணி நூல் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு நெசவாளர்களுக்கு கூலியை நோக்கமாக வழங்க வேண்டும் எனவும் அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என கூறி கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை எடுத்து செய்தியாளரிடம் பேசிய நெசவாளர் கமலநாதன், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனவும் அதனை பெறாவிட்டால் திங்கள் கிழமை அணைத்து கூட்டுறவு சங்க நெசவாளர்கள் சார்பில் இணை இயக்குனர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என தெரிவித்தார்.
மற்றொரு நெசவாளர் ஜீவா கூறுகையில், கடந்த 2011 இல் இதே போன்று ஒரு நிலை உருவானபோது, அனைத்து தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று அன்றிலிருந்து கடந்த 2024 வரை நெசவாளர்களின் கூலி , போனஸ் உள்ளிட்டவைகள் ரொக்கமாக கையில் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போதைய இணை இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கை தங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளதாகவும் இது நெசவாளர்களின் அன்றாட வாழ்வாதாரத்தினையும் விடுமுறை நாட்களில் பரிவர்த்தனை மேற்கொள்வதிலும் பெரும் சிக்கல் ஏற்படும் எனவும் இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.