Close
ஜனவரி 29, 2025 8:11 மணி

5 கிராம சபைக் கூட்டங்களில் மாதேஸ்வரன் எம்.பி., பங்கேற்பு..!

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் பொட்டிரெட்டிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாதேஸ்வரன் எம்.பி., கலந்துகொண்டு பேசினார்.

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டத்தில், 4 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 5 கிராமங்களில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில், லோக்சபா எம்.பி. மாதேஸ்வரன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு, அனைத்து கிராம பஞ்சாயத்துகக்களிலும், கிராச சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பொட்டிரெட்டிப்பட்டி, நாமக்கல் சட்டசபை தொகுதியில் மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அணியாபுரம், ப.வேலூர் சட்டசபை தொகுதியில், பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நடந்தை, திருச்செங்கோடு சட்டசபை தொகுதியில், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புது புளியம்பட்டி, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 85 கவுண்டம்பாளையம் ஆகிய கிராம பஞ்சாயத்துக்களில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில்,

நாமக்கல் லோக்சபா கொமதேக எம்.பி. மாதேஸ்வரன் கலந்துகொண்டார். அப்போது, கிராம சபைக் கூட்டத்தின் அவசியம் குறித்தும், கிராமசபை கூட்டங்களில் பொதுமக்களின் பங்களிப்பு குறித்தும் அவர் பேசினார். மேலும், அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். அந்த மனுக்களை துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கி மனுக்களின் மீது உடனடியாக தீர்வு காணுமாறு அவர்களை அறிவுறுத்ததினார்.

கூட்டங்களில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு, கிராம ஊராட்சிகளின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்து தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top