Close
ஜனவரி 29, 2025 7:49 மணி

புதுச்சத்திரத்தை தாலுகாவாக அறிவிக்க கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம்..!

புதுச்சத்திரம் -கோப்பு படம்

நாமக்கல்:

புதுச்சத்திரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என்று கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், நவணி கிராமத்தில், குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கிராம ஊராட்சி வரவு செலவுகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்களின் விபரங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதித்து ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 20 கிராமங்கள் உள்ளன. மொத்த மக்கள் தொகை 1 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இப்பகுதியில் உள்ளவர்கள் வருவாய்த்துறை சம்மந்தமான பல்வேறு பணிகளுக்காகவும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் பெறவும், நாமக்கல் தாசில்தார் அலுவலகம் சென்று வருவதற்கு சிரமமாக உள்ளது.

எனவே புதுச்சத்திரத்தில் இருந்து மேற்கே பெரியமணலி வரையும், வடமேற்கில் வையப்பமலை வரையும், கிழக்கில் காளப்பநாய்க்கன்பட்டி வரையும், வடக்கில் ஆண்டகளூர் கேட் வரையும், வடகிழக்கில் சிங்களாந்துபுரம் வரையும் எல்லையாக உள்ளது. ஆதலால் புதுச்சத்திரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திரளான அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top