மதுரை :
மதுரை மாநகர காவல் ஆணையர் தனிப்படை இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார், மதுரை கோவில்பட்டி பகுதியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் காரில் தப்பிச் செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காரில் துரத்தினார்கள்.
கொடைரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற ரவுடிகளின் கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியினில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மதுரையை சேர்ந்த ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் காயம் அடைந்தார். மற்றவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
காயம் அடைந்த சுபாஷ் சந்திரபோஸை ரவுடி என்று பாராமல் மாநகர காவல் ஆணையர் தனிப்படை போலீசார் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தப்பி ஓடிய குற்றவாளிகளை வளைத்துப்பிடித்து கைது செய்தும், காயம் பட்டவரை குற்றவாளி என்றாலும் மனிதநேயத்தோடு உரிய நேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த தனிப்படை போலீசாரின் செயலை மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.