Close
ஜனவரி 29, 2025 8:13 மணி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 14.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கல்..!

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

நாமக்கல் :

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 14.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார், கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை,

இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 540 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பரிசீலித்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி விரைவாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தாட்கோ மூலம் 13 பேருக்கு, ரூ. 13.90 லட்சம் மதிப்பில் செண்டரிங், தையல் மெசின், பயணியர் வாகனம் மற்றும் கறவை மாடு உள்ளிட்ட தொழில்கள் மேற்கொள்ள தொழில் கடனுதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஒருவருக்கு ரூ. 9,380 மதிப்பில் சக்கர நாற்காலி, மற்றொருவருக்கு ரூ. 15,780 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலி, 3 பேருக்கு ரூ. 8,610 மதிப்பில் காதொலி கருவிகள், மேலும் 2 பேருக்கு ரூ. 1,160 மதிப்பில் ஊன்றுகோல்கள் என மொத்தம் 7 பேருக்கு ரூ. 34 ஆயிரத்து 900 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் சிப்காட் வருவாய் அலுவலர் சரவணன், சமூக பாதுகாப்புத் திட்ட சப் கலெக்டர் பிரபாகரன், ஆர்டிஓ பார்தீபன், தாட்கோ மாவட்ட மேலாளர் ராமசாமி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top