Close
ஏப்ரல் 13, 2025 7:29 மணி

வாடிப்பட்டியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்..!

தேசிய பெண்குழந்தைகள் தினவிழாவில் மாணவிகளின் பேரணி.

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க நடுநிலை மேல்நிலைப் பள்ளிகளில் பிரிட்டானியா ஊட்டசத்து அறக்கட்டளை சார்பாக தேசிய பெண் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவையொட்டி முடுவார்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணிக்கு தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட அலுவலர் ரஞ்சிதா துவக்கி வைத்தார். மேலும் செம்மினிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மனித-சங்கிலி மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

மேலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் மண்ணாடிமங்கலம் , தெ. கொழிஞ்சிபட்டி, அ.புதுப்பட்டி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி பண்ணைகுடி ஆகிய பள்ளிகளில் பல்வேறு வகையான போட்டிகளும் நடைபெற்றது.

போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் பிரிட்டானியா ஊட்டசத்து அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்டது. மாவட்ட திட்ட அலுவலர் ரஞ்சிதா, பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஆனந்த், பானுப்பிரியா, வாஞ்சிநாதன், ஜாகின் மற்றும் தேவிப்பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top