காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலத்தின் கீழ் பணிபுரியும் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்களுக்கான புத்தொளி பயிற்சி தொடங்கியது..
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் இணை ஆணையர் மண்டலம் மற்றும் காஞ்சிபுரம் உதவி ஆணையர் பிரிவு சார்பில் அட்சயர்கள் வட்டாட்சியார் அவர்கள் மற்றும் ஓதுவார்களுக்கான புத்தொளி பயிற்சி இன்று காஞ்சிபுரம் திருக்கோயில் கலையரங்கத்தில் துவங்கியது.
இதில் காஞ்சிபுரம் உதவி ஆணையர் அலுவலகத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணி புரியும் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்கள் ஆகியோருக்கு பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்படும்.
அவ்வகையில் வேதம் மற்றும் ஆகமம் சைவ சித்தாந்தம் சில்பசாஸ்திரம் திருமுறை உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் மணி குருக்கள், சுந்தரேஸ்வரர், ராஜவேலு ஸ்தபதி மற்றும் ஆடலரசு ஓதுவார் ஆகியோர் இன்று பயிற்சிகளை அனைவருக்கும் எடுத்துரைத்தினர்.
இதில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கு பெற்றனர். கடந்த 25 ஆம் தேதி துவங்கிய இந்த புத்தொளி பயிற்சி வகுப்புகள் பிற்பகல் ஒரு மணி முதல் 3 மணி வரை 6 வாரங்களுக்கு நடைபெறும் என இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.