காக்கவாக்கத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட , ஒன்றிய, நகர, பேரூர் இளைஞரணி கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்பு.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் காக்கவாக்கம் கிராமத்தில் தனியார் விடுதியில் திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக இளைஞரணி அறிமுகம் மற்றும் சமூக வலைதள பயிற்சி வழங்கும் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி. லோகேஷ்,மாவட்ட துணை அமைப்பாளர்கள் டி.சங்கர்,மோகன்பாபு, முரளிதரன்,யுவராஜ், கதிரவன் ஆகியோர் வரவேற்றனர்.
தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி,மாவட்ட அவைத்தலைவர் பகலவன், துணைச்செயலாளர் உமா மகேஸ்வரி, பொருளாளர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி , குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் அப்துல் மாலிக் , இளைஞரணி செய்தி தொடர்பாளர் சூரிய கிருஷ்ணமூர்த்தி, செய்தி தொடர்பாளர் செந்தில்
கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் ஆ.சத்தியவேல், மணிபாலன், கி.வே.ஆனந்தகுமார் , ஜான் பொன்னுசாமி, பேரூர் செயலாளர்கள் அபிராமி குமரவேல் , ஆரணி முத்து , தமிழ் உதயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரவிக்குமார், சம்பத், சுமன், ஜெயலலிதா, ராஜேஷ், வெற்றி, தினகரன் மற்றும் தில்லைகுமார், விமல்ராஜ், ஆத்துப்பாக்கம் வேலு, வடிவேலு, அசோக், கார்த்திக், லோகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞரணி நிர்வாகிகள் 2026 தேர்தலில் முனைப்புடன் செயல்பட வேண்டும்,
உங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களை சேர்க்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இறுதியில் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஐ.ராஜா நன்றி கூறினார்.