நான்கு நாட்களில் திருமணம் ஆக உள்ள நிலையில், திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம் மணப்பெண்…
திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரின் மகள் மகேஸ்வரி . வயது 26. இவர் சிங்காடிவாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் , தான் பணிபுரிந்து வந்த தொழிற்சாலையில் உடன் பணிபுரியும் சக தொழிலாளர்களுக்கு திருமண அழைப்பிதழ் அளிக்க தனது அக்கா கணவர் திருமலையுடன் இருசக்கர வாகனத்தில் வந்து அழைப்பிதழ்கள் அளித்துவிட்டு, ஊர் திரும்பி கொண்டிருந்தார்.
இந்நிலையில் சேந்தமங்கலம் அருகே மேம்பால பணி நடைபெற்று வருவதால், அப்பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து உள்ள நிலையில் அதில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்த போது, இருசக்கர வாகனத்தின் பின்பக்கம் அமர்ந்திருந்த மகேஸ்வரி சாலையில் விழுந்த போது தலையில் பழுத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சாலை விபத்து சம்பந்தமாக சுங்குவார்சத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னும் நான்கு நாட்களில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் சாலை விபத்தில் இளம் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.