Close
ஜனவரி 30, 2025 11:48 மணி

நீர்மேலாண்மை திட்டத்தால் விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பு : இயக்குனர் அறிவிப்பு..!

நீர் மேலாண்மை திட்டம் மூலம் விவசாயிகளின் வருமானம் 25 சதவீதம் முதல் 100 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நீர் மேலாண்மை திட்ட இயக்குனர் ஜவகர் தெரிவித்துள்ளார்.

நீர் மேலாண்மை திட்டம் மூலம் விவசாயிகளின் வருமானம் 25 சதவீதம் முதல் 100 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நீர் மேலாண்மை திட்ட இயக்குனர் ஜவகர் தெரிவித்துள்ளார்..

தமிழ்நாடு அரசு நீர்வளத் துறை சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டம் 2000 அதன் சட்டம் மற்றும் வீதிகள் திருத்தம் குறித்து மண்டல அளவிலான இரண்டாவது கலந்தாய்வுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் அரசு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் திட்ட இயக்குனர் தென்காசி.ஜவஹர் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வுக் கூட்டத்தினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் திட்ட இயக்குனர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

இந்தக் கலந்தாய்வு கூட்டத்தினை துவக்கி வைத்த திட்ட இயக்குனர் ஜவகர் கூறுகையில்,

இத்திட்டத்தின் நோக்கமான உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப விவசாயம் செய்தல், நீர் மேலாண்மையினை மேம்படுத்துதல் உள்ளிட்டவைகளை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.

இத்திட்டத்தில் தமிழ்நாடு அரசின் ஏழு துறைகள் , 3 பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்படுகிறது.

இத்திட்டத்தில் இதுவரை 13.42 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ள விவசாய நிலங்கள் பயன்பெற்று 14 லட்சத்து 44 ஆயிரத்து 849 விவசாயிகளின் வருமானம் 25 சதவீதம் முதல் 100% உயர்ந்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 34 மாவட்டங்களில் 5,137 நீர்ப்பாசன சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சட்டங்களை திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்று, தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு துவங்கியுள்ளது.

ஏழு மாவட்டங்களில் இது போன்ற கலந்த ஆய்வுகள் நடைபெற்று நிறைவு பெற்ற நிலையில், இன்று எட்டாவது ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிப்பார்.

இதுவரை இந்த சட்ட திருத்தத்தில் 43 கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் இன்று காஞ்சிபுரத்தில் பெறப்படும் கருத்துக்கள் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி சட்ட சபையில் திருத்தங்கள் மேற்கொள்ள வழிவகை செய்யப்படும்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு தலைமை பொறியாளர் நாகராஜன் கீழ் பாராளு வடிவில் போட்ட செயற்பொறியாளர் செல்வகுமார் நீர் மேலாண்மை நிபுணர் கிருஷ்ணன் பொறியாளர் மங்கையர்க்கரசி உதவி செயற்பொறியாளர் மார்க்கண்டேயன் உள்ளிட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் , விவசாய நீர்ப்பாசன சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top