Close
ஜனவரி 30, 2025 2:40 மணி

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேக விழா முன்னேற்பாடுகள்: கலெக்டர் நேரில் ஆய்வு..!

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேக விழா முன்னேற்பாடு பணிகளை, நாமக்கல் கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன்.

நாமக்கல் :

வருகிற பிப். 2ம் தேதி நடைபெற உள்ள, பெரியூர் மருதகாளியம்மன் கும்பாபிசேக விழா முன்னேற்பாடுகளை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, தும்மங்குறிச்சி பெரியூரில், பிரசித்திபெற்ற அருள்மிகு மருதகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் புதிதாக 5 நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு, கோயில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. இதையொட்டி வருகிற பிப். 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணிக்கு, கோயில் மகா கும்பாபிசேக விழா நடைபெற உள்ளது.

தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்துகொள்ள உள்ளனர். இதையொட்டி கோயில் வளாகத்தை நாமக்கல் கலெக்டர் உமா, போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர்.

கோயில் வளாகத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டுள்ள இடம், உணவு தயார் செய்யும் இடம், உணவு வழங்கும் இடம், கோவில் வளாகம், வாகன நிறுத்தமிடம், சாலைப் பணிகள், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி, கும்பாபிஷேகம் நடைபெறும் கோபுரம் மற்றும் அதற்கு அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்புகள் குறித்த உறுதித் தன்மை போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

போலீஸ் ஏ.எஸ்.பி. ஆகாஷ் ஜோஷி, மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, ஆர்டிஓ பார்தீபன், அறநிலையத்துறை உதவி கமிஷனர் சுவாமிநாதன், மின்சாரத்துறை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள், தீயணைப்பு துறை, மருத்துவத்துறை துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top