நமக்கு நாமே திட்டத்தின் மூலம் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் ரூபாய் 1.50 லட்சம் செலவில் 700 மீட்டர் தூரம் சாலையோர குப்பைகளை அகற்றி உறுதி மொழி எடுத்த மதுரை அவனியாபுரம் காவேரி நகர் பொதுமக்கள்:
மதுரை.
மதுரை மாநகராட்சி 92 வது வார்டுக்கு உட்பட்ட எம் , எம் சிட்டி , காவிரி நகர் விரிவாக்கப் ஆகிய பகுதிகளில் சுமார் 700 க்கும் மேற்பட்ட வீடுகளில் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
மதுரை மாநகராட்சி காலனி வழியாக முத்துப்பட்டி செல்லும் சாலையில் பொதுமக்கள் நடமாட்டமின்றி இருப்பதால் ஏராளமான கட்டிட கழிவுகள், குப்பைகளை கொட்டி திடீர் குப்பை மலையை உருவாக்கி நோய் தொற்று பரவும் நிலையில் இப்பகுதி மக்கள் உள்ளனர்.
மேலும், இருட்டான பகுதி என்பதால் சமூக விரோத செயல்களும் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்த, எம்.எம் சிட்டி மற்றும் காவேரி நகர் விரிவாக்க பகுதி குடியிருப்போர் நல சங்க பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
சுமார் 150 டன் குப்பைகளை உடனே அகற்ற முடியாத நிலையில், குடியிருப்பு சங்க நிர்வாகிகளும், மதுரை மாநகராட்சியும் இணைந்து நமக்கு நாமே திட்டம் மூலம் இணைந்து செயல்படுத்த 92 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி முயற்சியின் பேரில், சங்க உறுப்பினர்களிடம் நிதி திரட்டி குப்பைகளை அகற்றும் திட்டத்தை செயல்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, 92 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி தலைமையில் குடியிருப்போர் நல சங்க தலைவர் செல்வம்,செயலர் காதர் உசேன்,பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் “குப்பைகளை பொதுவிடங்களில் கொட்டாமல் குப்பைத் தொட்டியில் போடுவோம்”
“நமது பகுதி தூய்மையான பகுதி அதனை பராமரித்து தூய்மை பணியாளர்களுக்கு உதவுவோம் ” போன்ற வாசகங்களுடன் உறுதிமொழியை வாசித்து மற்றவர்களுக்கு முன்னதாரணமாக திகழ்கின்றனர்.
“நமக்கு நாமே ” தூய்மை பணி திட்ட நிகழ்ச்சியில் எம்எம் சிட்டி காவேரி நகர் விரிவாக்க பகுதி குடியிருப்போர் நலசங்க தலைவர் செல்வம் , காதர் உசேன், பொருளாளர் செந்தில்குமார், 92 வது மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி தலைமையில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் சுகாதார அலுவலர்கள் மற்றும் குடியிருப்பு நலசங்க பொதுமக்கள் உட்பட 180க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழியை எடுத்து தூய்மை பணியை செய்தனர்.
ஒவ்வொரு திட்டத்திற்கும் அரசை எதிர்பார்க்காமல் பொதுமக்களாக தாங்களே முன்வந்து தங்களது பகுதியை தூய்மைப்படுத்துவதுடன் உறுதிமொழி எடுத்தது மதுரை அவனியாபுரம் பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.