Close
ஜனவரி 30, 2025 9:24 மணி

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு பிரிவில் இளம் வல்லுனர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!

இளம் தொழில் செய்பவர்கள் -கோப்பு படம்

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டத்தில், கலெக்டர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட கண்காணிப்பு பிரிவில், இளம் வல்லுநராக (யங் புரொஃபஷனல்) பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் உள்ள திட்ட செயலாக்க பிரிவிற்காக மாவட்ட அளவில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்த விரிவான ஆய்வு மற்றும் தரமான தரவுகளை ஆய்வு செய்தல், ஆய்வுகளின் அடிப்படையில் விளக்க காட்சிகள், கொள்கை விளக்கங்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் இளம் வல்லுநராக பணியாற்றிட தகுதியான நபர் ஒருவர் அவுட் சோர்சிங் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது.

இப்பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எடெக் ஐ.டி.,அல்லது டேட்டா சயின்ஸ் மற்றும் புள்ளியியல் படிப்பில் இளநிலை பட்டம் அல்லது முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த, தற்காலிக பணிக்கு வலுவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுத் திறன், தரவு பகுப்பாய்வில் தேர்ச்சி (எக்öஸ்ல், எஸ்பிஎஸ்எஸ், ஆர்.) தன்னிச்சையாகவும், குழுவாகவும் இணைந்து பணிபுரியும் திறன் அவசியம் வேண்டும். 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாதம் ரூ.50,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

இப்பணிக்கான விண்ணப்பத்தினை ஒரு வெள்ளைத் தாளில் சுயவிவரங்களுடன் டைப்பிங் செய்து அனைத்து கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களை கண்டிப்பாக இணைத்து நாளை 31ம் தேதிக்குள் நாமக்கல் பொன் விழா நகரில், அம்மா பூங்கா எதிரில் உள்ள, மாவட்ட மகமை, மேலாளருக்கு வந்து சேரும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top