புதிய மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கடைகளை அடைத்த தமிழ்நாடு மோட்டார் வாகன சட்ட ஆலோசகர்கள், திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதிய மோட்டார் வாகன சட்டத்தில் ஆன்லைன் மூலம் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. வாகன விற்பனையில் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது.
பழைய வாகனங்களை விற்கும் போதும், புதிய வாகனங்களை வாங்கும் போதும், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் நடைமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது.
புதிய வாகன சட்டத்தில் விதிக்கப்படும் அபராதங்கள் வாகன ஓட்டிகளுக்கே தெரிவதில்லை. ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் ஓ.டி.பி., நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
பழைய வாகனங்களை விற்கும் போதும், அஞ்சல் முறையில் ஆர்.சி., புத்தகங்களை அனுப்பும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். டிடி கேசில் அபராதம் கட்டும் நடைமுறைகள் கடுமையாக உள்ளன. அதனை எளிமைப்படுத்த வேண்டும்.
இது போன்ற கடும் நடைமுறைகளால் பழைய வாகனங்களை விற்கும் தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர்கள் நலச்சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதற்காக ஜனவரி மாதம் 30ம் தேதி வியாழக்கிழமை அன்று திருச்சி தென்னுார் உழவர்சந்தை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் மாநில தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார்.
மாநில பொருளாளர் சேகர் வரவேற்றார். மாநில பொருளாளர் டேவிட், முதன்மை செயலாளர் தமிழரசன், மாநில இணை செயலாளர் ஷாஜகான், மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் இருந்தும் சங்க உறுப்பினர்கள் கடைகளை அடைத்து விட்டு வந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மாநில துணைத்தலைவர் ராஜா நன்றி கூறினார்