Close
ஜனவரி 31, 2025 11:56 காலை

தற்காலிக ஓட்டுநர் வேகமாக இயக்கியதால் பள்ளத்தில் பாய்ந்த அரசு பேருந்து : 20க்கும் மேற்பட்டோருக்கு காயம்..!

விபத்தில் சிக்கிய பேருந்து

சோழவந்தான் அருகே அதிவேகமாக இயக்கிய தற்காலிக ஓட்டுனரரால் அரசு பேருந்து கட்டுப்பாடு இழந்து 10 அடி பள்ளத்தில் விழுந்ததில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகில் உள்ள திருவேடகம் பகுதி பள்ளிவாசல் அருகே சோழவந்தான் அரசு பேருந்து பணிமனையில் தற்காலிக ஓட்டுநராக பணிபுரிந்து ஓட்டுநர் நகர பேருந்தை இயக்கினார்.

அந்த பேருந்து நாச்சிகுளம் கிராமத்தில் இருந்து மதுரை அண்ணா நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த புதிய ஓட்டுநர் வேகமாக பேருந்தை இயக்கியதால் அந்த பேருந்து நிலை தடுமாறி வைகை ஆற்றுக்கரையில் உள்ள 10 அடி பள்ளத்தில் தென்னை மரத்தின் மீது பலமாக மோதியது.

இதில் அரசு பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். உடனே, அங்கிருந்த பொதுமக்கள் அரசு பேருந்தில் இருந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த அனைவரையும் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
.
அரசு பேருந்து தென்னை மரத்தின் மோதியதில், மின்சார கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் விழுந்தது. ஆனால் சாலையில் மின் கம்பி விழுந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் செல்லாதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

சோழவந்தான் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top