Close
ஜனவரி 31, 2025 11:56 காலை

வாழும்கலை அமைப்பு நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் காஞ்சிபுரம் வருகை..!

வாழும் கலை அமைப்பு நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர்

வாழும் கலை அமைப்பு நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் இன்று ஒரு நாள் பயணமாக காஞ்சிபுரம் கோயில்களில் சிறப்பு சாமி தரிசனம் கொண்டார்.

திருக்கோயில்கள் சார்பாக அவருக்கு சிறப்பான வரவேற்பு மற்றும் சிறப்பு அர்ச்சனைகள் மேற்கொள்ளப்பட்டு திருக்கோயில் பிரசாதங்கள் அளிக்கப்பட்டது..

தமிழ்நாட்டில் உள்ள பாபநாசம் பகுதியில் பிறந்த எளிமையான குருவாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவரும், வாழும் கலை என்ற அமைப்பை 1982 ஆம் ஆண்டு உருவாக்கி அதன் மூலம் தியானம், அறிவு செல்வத்தை தற்காலத்திற்கு ஏற்ப தனது பேச்சாற்றல் மூலம் அனைவரையும் ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ஒரு நாள் பயணமாக காஞ்சிபுரம் வருகை புரிந்தார். பச்சையப்பன் ஆடவர் கல்லூரி ஹெலிகாப்டர் மைதானத்தில் வந்த அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஏலவார் குழலி உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு வந்த அவருக்கு மேள தாளங்கள் முழங்க மரியாதை செய்யப்பட்டு, மூலவரை சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டு சாமி தரிசனம் செய்த அவருக்கு தல வரலாறு சிவாச்சாரியார்களால் சிற்பங்களை மேற்கொள் காட்டி எடுத்துரைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு தரிசனம் மேற்கொண்ட பின் திருக்கோயில் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அதில் அவருக்கு நினைவு பரிசாக சிறிய வடிவிலான வெள்ளி காமாட்சி அம்மன் சிலை அளிக்கப்பட்டது.

அவருடன் இந்திய தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் சரவணன் மற்றும் காஞ்சிபுரம் பாஜக மாவட்ட தலைவர் ஜெகதீசன், சங்கரமட வரவேற்பு குழுவை சேர்ந்த கணேஷ், பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top