காஞ்சிபுரம் திமுக மாணவரணி சார்பில், யுஜிசியின் புதிய வரைவு விதிகளுக்கு எதிராக காஞ்சிபுரம் கல்லூரி மாணவர்கள் தங்கள் எதிர்ப்பு பதிவு செய்தனர்.
புதிய வரைவு விதிகளால் நேரும் பாதிப்பு குறித்து சட்டமன்ற உறுப்பினரும், மாநில மாணவரணி செயலாளருமான எம்எல்ஏ எழிலரசன் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்
இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கும் கல்வி உரிமையையும் மாநில உரிமையும் பறிப்பதற்கு மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் எளிய மக்களின் கல்வியை நாசம் செய்யும் நோக்குடவனும் சமூக நீதியை பறிப்பதற்கும் தொடர்ந்து தமிழகத்தில் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் அனைவருக்கும் அனைத்தும் என்ற நிலையை ஏட்டுவதற்கு தடையாக தற்போது பல்கலைக்கழக மானிய குழுவின் வரைவு உரிமைகள் 2025 கண்டித்து திமுக எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் உள்ள கல்வியாளர்கள் மாணவர்களிடையே இந்த ஆபத்தை எடுத்துரைக்கும் வகையில் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாணவரணி சார்பில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு புதிய வரைவு விதிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மாநில திமுக மாணவர் அணி செயலாளருமான எழிலரசன் எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து பல்கலை கழக பழையவிதிகள், நடைமுறையை தொடர்ந்து நீடிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வண்ணம் ஸ்கேன் செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மாணவரணி நிர்வாகிகள் பிரசாத், தமிழ்ச்செல்வன், சுரேஷ்குமார், தீபம் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்