காரியாபட்டி அருகே அரசு பள்ளியில் புதிய ஆய்வக கட்டிட பணிகள் :அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
காரியாபட்டி:
காரியாபட்டி அருகே, அரசு பள்ளி யில் புதிய ஆய்வக கட்டிட பணி யினை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பி. புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதிய ஆய்வகம் கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடை பெற்றது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி, ஒன்றிய கழக செயலாளர் கண்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ் வாணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய் கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.