Close
ஏப்ரல் 28, 2025 7:38 மணி

தேனியில் இலவச மருத்துவ முகாம்

முகாமில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடந்தன.

தேனி நேசம் மக்கள் நல சேவை மையம் மற்றும் தேனி நலம் ஹெல்த்கேர் இணைந்து தேனி நேசம் மக்கள் நல சேவை மையத்தில் பாத பராமரிப்பு மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினர்.

தொடக்க நிகழ்வில் நேசம் மக்கள்நல சேவை மைய தலைவர் காதர்பிச்சை தலைமை வகித்தார் JIH தேனி தலைவர் அபுதாஹிராஜா வரவேற்றார். தேனி நகர்மன்ற துணைத் தலைவர் செல்வம் தொடங்கி வைத்தார்.

அனைவருக்கும் இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம், தசை வலிமை, பாத பராமரிப்பு மற்றும் கல்லீரல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனை செய்தவர்களுக்கு நலம் ஹெல்த் கேர் மருத்துவர்கள் அப்ரிதா, சபிதா ,அகமது பாசித், மற்றும் ஹேமா சுஷ்மிதா மருத்துவ ஆலோசனைகள மற்றும் உணவு ஆலோசனைகளை வழங்கினர்.

தேனியில் நேசம் அறக்கட்டளை, நலம் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பங்கேற்ற நிர்வாகிகள்

மெய்வழி சட்ட மைய தேனி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செல்வலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். தேனி மருத்துவ கல்லூரி பேராசிரியர் முனைவர் அமுதா, மெய்வழி மக்கள் இயக்க தேனி மாவட்ட செயலாளர் தினேஷ் குமார், தேனி  மாநகர் ஜமாத் தலைவர் சர்புதீன், IRCS தேனி மாவட்ட நிர்வாகக் குழு உறுபினர் முகமது பாட்சா, ஆண்டிபட்டி உமா நாராயணன் பதிப்ப தலைவர் சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நலம் ஹெல்த் கேர் PRO சிவக்குமார், சமூக நல்லிணக்க பேரவை கௌரவ தலைவர் ஹபிபுல்லா, வெல்ஃபேர் கட்சி மாவட்ட தலைவர் முகமது சபி, RIFAH மாவட்ட நிர்வாகி காஜா மைதீன், சாலிடாரிட்டி மாவட்ட நிர்வாகி சஃபியுல்லா, GIO நிர்வாகி புதிரா, JIH மகளிர் அணி நிர்வாகி பஃரிதா, CIO நிர்வாகி ஹசீனா, IRW நிர்வாகி அப்துல் கனி மற்றும் அறிவுச்சோலை நிர்வாகி ஹாரிஸ் ஆகியோர் முகாம் களப் பணிகளை ஒருங்கிணைத்தனர். நே.ம.ந.சே.மைய நிர்வாகி உசேன் நன்றி தெரிவித்தார். நூற்றுக்கு மேற்பட்டோர் முகாமில் பங்கேற்று பயன் பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top