தேனித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு அரசின் சிங்கார வேலர் விருது பெற்ற எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணிக்குப் பாராட்டு விழாக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குச் சங்கத்தின் தலைவர் சு.சி. பொன்முடி தலைமை தாங்கினார். சங்கத்தின் துணைத்தலைவர் க. பாண்டியராசன், துணைச்செயலாளர் இரா. முருகேசன், பொருளாளர் அ. முகமது பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் முனைவர் தி. நெடுஞ்செழியன், புலவர் மு. ராஜரத்தினம், கவிஞர் பே. ராஜேந்திரன், முனைவர் அ. சந்திரபுஷ்பம், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பெ. இளங்கோ, தேனி சீருடையான், கவிஞர் வதிலை பிரபா, முனைவர் ஜெ. விஜயதுரை, முனைவர் அ. ரவீந்திரநாத் நேரு, முனைவர் அ. காமாட்சி, மு. அன்புக்கரசன், வழக்கறிஞர் மணி கார்த்திக், புலவர் ச. ந. இளங்குமரன், கவிஞர் ம. கவிக்கருப்பையா, முனைவர் ஜா. ஜீலிபிரதிபா, டாக்டர் சீனிப்பாண்டியன், முனைவர் அப்துல்காதர், வே. சிதம்பரம், கவிஞர் பாண்டிய மகிழன், விடியல் வீரா, நீலபாண்டியன், ஆ. முத்துக்குமார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.
நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பாலு, செல்லச்சாமி உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் கலந்து கொண்டு சிங்காரவேலர் விருதாளரை வாழ்த்திப் பேசினர்.
சிங்காரவேலர் விருதாளரும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளருமான எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி ஏற்புரை வழங்கினார். காரைக்குடி சிவாச்சாரியார் பழ. பாஸ்கரன் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார்.
முன்னதாக, கவிஞர் மகேஸ்வரி வெற்றி வரவேற்புரை வழங்கினார். முடிவில் முத்துவிஜயன் நன்றி தெரிவித்தார். காய்கனிச் சிற்பக் கலைஞர் மு. இளஞ்செழியன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.