வாடிப்பட்டி:
வருகை பதிவேடு துவங்கி எலந்த பழம்வழங்கிமலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட 20 ஆண்டுகால அரசு பள்ளி பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இந்தப் பள்ளியில் 2004 கல்வியாண்டில் வணிகவியல் கலை பிரிவில் படித்த மாணவர்கள் சந்திக்கும் குடும்ப விழா கலை நிகழ்ச்சி விளையாட்டு போட்டி பரிசளிப்பு பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு , உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற் றி துவக்கிவைத்தார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் போஸ் பாப்பையன் முன்னிலை வகித்தார். பழைய மாணவர் வேல்முருகன் வரவேற்றார். இந்த விழாவில்,பேரூராட்சித்தலைவர் பால்பாண்டியன், கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி, ஜெயகாந்தன், கணிப்பொறி ஆசிரியர் கார்த்திக் ஆகியோர் பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் மலரும் நினைவுகளை நினைவு படுத்தும் வகையில் அன்றைய வகுப்பு ஆசிரியர் சொக்கர் வருகை பதிவேடு வாசித்து வந்தவர்களின் வருகையை பதிவு செய்தார். அதன் பின் தங்களுடன் பள்ளியில் பயின்று தற்போது இயற்கை எய்திய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், பழைய மாணவர்களின் பிள்ளைகள் தங்களின் தனித்திறமையைை வெளிப்படுத்தும் பல்வேறு விளையாட்டு போட்டி,கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு பங்கு பெற்ற அனைவருக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் சொக்கர் பரிசுகளும், பழைய மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுவழங்கினார். இதில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
மேலும் ,2004 காலகட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் மேடை முன்பாக பள்ளிக்கு முன்பு விற்பனை செய்த எலந்த பழம் வடை பாக்கெட்டுகள், பத்து பைசா லக்கி சீட்டு விளையாட்டு பிளாஸ்டிக் பொம்மைகள், தட்டு, பென்சில், பேனா, சீப்பு, கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய அட்டை தொங்கவிடப் பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் பங்களிப்பு செயல்பாடுகள் நிகழ்வுகளை தொகுத்து கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை தலைவர் கவிஞர் பொன். பனகல் பொன்னையா இதயம் மகிழும் நட்பு திருவிழா என்ற தலைப்பில் கவிதை எழுதி வழங்கினார். இதன் ஏற்பாடுகளை பழைய மாணவர்கள் ஒருங்கினைப்பு குழுவினர் செய்திருந்தனர். முடிவில், ராமச்சந்திரன் நன்றி கூறினார்.