மதுரை:
மதுரை அண்ணாநகர், வைகை காலனி, அருள்மிகு வைகை காலனியில் அமைந்துள்ள வைகை விநாயகர் ஆலயத்தில் தை மாத சிறப்பு பூஜைகள், திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது.
முன்னதாக காமாட்சி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சணைகள் நடைபெற்றது. இதையடுத்து, கோயிலில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், முத்துக்குமார், மணி மாறன் மற்றும் ஆன்மீக மகளிர் குழுவினர் செய்து இருந்தனர்.