நாமக்கல் :
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில், வெறும் வெட்டிப்பேச்சு தொகுதிக்கான வளர்ச்சியை கொடுக்காது என்பதை புரிந்து கொண்டு மக்கள் வாக்களித்துள்ளனர் என கொமதேக பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கøயில் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பாக போட்டியிட்ட திமுக வேட்டாளர் வி.சி.சந்திரகுமார் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு திமுக தலைரும் முதல்வரருமானஸ்டாலின், அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் வேட்பாளர் சந்திரகுமார் உள்ளிட்டோருக்கு கொமதேக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
தொகுதியில் இதுவரை நடைபெற்ற நல்ல திட்டங்களுக்காகவும், தொடர்ந்து நடைபெற வேண்டிய நலத்திட்டங்களுக்காகவும் மக்கள் தேர்தலில் வாக்களித்துள்ளனர். வெறும் வெட்டிப் பேச்சு தொகுதிக்கான வளர்ச்சியை கொடுக்காது, மக்களுடைய துன்பங்களை தீர்க்காது என்பதை புரிந்து கொண்டு மக்கள் வாக்களித்துள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.