காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும்,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து தமிழ் மரபில் அகத்தியர் தொன்மம் என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரியின் முதல்வர் கே.ஆர்.வெங்கடேசுவன் தலைமை வகித்தார்.
கல்லூரியின் தலைவர் எஸ்.ராமச்சந்திரன்,செயலாளர் வி.பி.ரிஷிகேஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.
மத்திய அரசின் பண்பாட்டு அமைச்சக தென்மண்டல நிர்வாகியும்,நாகூர் தேசிய ஆராய்ச்சி விருதாளருமான ஆ.செல்லபெருமாள் தமிழப்பண்பாட்டு நாயகர் அகத்தியர் என்ற தலைப்பில் பேசி கருத்தரங்கை தொடக்கி வைத்தார்.
கருத்தரங்கில் தமிழ் இலக்கண இலக்கியங்களில் அகத்தியர் என்ற தலைப்பில் புதுவைப் பல்கலைக்கழக பேராசிரியர் பா.ரவிக்குமார்,கல்வெட்டிலும்,சுவடிகளிலும் அகத்தியர் என்ற தலைப்பில் திருவாரூர் மத்தியப் பல்கலையின் பேராசிரியர் ச.ரவி ஆகியோர் பேசினார்கள்.
இதனைத் தொடர்ந்து அறிவியல் மரபில் அகத்தியர் என்ற தலைப்பில் நந்தனம் அரசு கல்லூரி இணைப்பேராசிரியர் சு.பலராமனும்,தொண்டை நாட்டில் அகத்தியர் என்ற தலைப்பில் அச்சிறுப்பாக்கம் ஆசிரியர் பூசை.ச.ஆட்சிலிங்கமும் பேசினார்கள்.
கருத்தரங்க நிறைவுரையாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் மருத்துவர் சுதா சேஷய்யன் பேசினார்.ஏற்பாடுகளை கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.