ரூ.13 லட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடையை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
தென்காசி மாவட்டம், தென்காசி கூளக் கடை பஜாரில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் பூமாதேவி சட்ட மன்ற உறுப்பினர் பழனி நாடாரிடம் கோரிக்கை விடுத்தார்.
அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அதன் அடிப்படையில் பணிகள் நிறைவு பெற்றது. அதனை இன்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் நகர தலைவர் மாடசாமி ஜோதிடர், நகர பொருளாளர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டர்.