மதுரை:
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய பூச நாளில் வரும் தை பூச திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும்.
இந்த ஆண்டிற்கான தைப்பூச விழா , லட்சகணக்கான பக்தர்கள் வருகையால் வெகு விமர்ச்சியாக கொண்டாடப்படுகிறது.
தை பூச விழாவையொட்டி, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இருந்து மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவிலுக்கு மேள தாளங்கள் முழங்க பூஜை பொருட்கள் எடுத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.
பழனியாண்டவருக்கு ராஜ அலங்காரம்:
இதனை தொடர்ந்து பழனியாண்டவருக்கு உகந்த பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பால், பன்னீர், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ அபிஷோ ஆராதனையுடன்
பூஜை நடைபெற்றது.
இதனையடுத்து, பழனியாண்டவருக்குகண்கொள்ளாக் காட்சியாக ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. பழனியாண்டவர் சந்நிதியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பய பக்தியுடன் பழனியாண்டவரை வழிபட்டனர்.
2 முருகன், தெய்வானையுடன் உற்சவர் 2 முருகப்பெருமான்
தைப்பூச திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக இரவு. 630 மணிக்கு திருப்பரங்குன்றம் சன்னதியில் புறப்பட்டு ஒரே நேரத்தில் 2 முருகன் தெய்வானையுடன் உற்சவர்கள் 2 முருகப்பெருமான் எழுந்தருளுகின்றனர். அதாவது, சுப்பிரமணியசுவாமி தெய்வானை அம்பாளும், முத்துக்குமாரசுவாமி தெய்வானை அம்பாளுமாக ஒரேநேரத்தில் எழுந்தருளி நகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானை எழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.