Close
பிப்ரவரி 23, 2025 4:07 காலை

கொண்டையம்பட்டி வயித்துமலை சித்தன் சிவசுப்பிரமணியன் கோயில் தைப்பூச விழா..!

பால்குட ஊர்வலம்

சோழவந்தான்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தில் வயித்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வயியித்துமலை சித்தன் சிவசுப்பிரமணியன் திருக்கோயிலில் 16ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு கடந்த நாலாம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பறவை காவடி பால்குடம் இளநீர் காவடி எடுக்கும் நிகழ்ச்சி காலை 10 மணிக்கு கொண்டையம்பட்டி மந்தை திடலில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து ஐந்து கிலோமீட்டர் தூரம் உள்ள வயித்துமலை அடிவாரத்தில் உள்ள வயித்துமலை சித்தன் சிவசுப்பிரமணியன் திருக்கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர்.

வழிநெடுக கிராம மக்கள் சர்பத், மோர், இளநீர், தர்பூசணி உள்ளிட்ட குளிர் பானங்கள் மற்றும் பழங்களை பக்தர்களுக்கு வழங்கி தாகத்தை தணித்தனர். சுமார் ஒரு மணி நேர பாதயாத்திரைக்குப் பின்பு வயித்து மலை அடிவார கோயிலுக்கு வந்தடைந்த பக்தர்கள் சிவசுப்பிரமணியனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஊர்வலத்தில் பெண்கள் இளநீர் காவடி எடுத்தும், வேல் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் சாமியாடி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தைப்பூச விழாவை தொடங்கி வைத்தவர்கள் மதியழகன், ஆர் கே பி குமார், முனியாண்டி, சேகர், முருகன் மற்றும் பால்குட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தவர்கள் முருகானந்தம், அனு மற்றும் முத்துராமலிங்கம், மாணிக்கம், சாந்தி மற்றும் பால்பாண்டி சுந்தரமூர்த்தி உள்பட விழா குழுவினர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top