மதுரை:
மதுரை ஶ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் மதுரை மண்டல அளவிலான நுகர்வோர் திருவிழா நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சதீஸ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ரா.ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.