Close
பிப்ரவரி 22, 2025 10:33 மணி

பெரியாரை வெல்லவும் முடியாது, வீழ்த்தவும் முடியாது : கனிமொழி எம்.பி.,.!

கனிமொழி

விழுப்புரம் :

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக தெற்கு மாவட்ட மகளிர் அணி -மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு கனிமொழி எம்பி பேசினார்.

அப்போது அவர் தமிழகத்தின் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது அவர்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அளித்து வருவது திராவிட முன்னேற்றக் கழக அரசு, வருகின்ற தேர்தல் நமது உரிமைகளை பாதுகாக்கின்ற தேர்தல் இதனை மக்களிடம் எடுத்து கூறுங்கள்,

தமிழகத்தில் பெண்களின் கனவுகளை புரிந்து கொள்கிற திமுக அரசு வருகின்ற தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்,

பெண்கள் அனைவரும் தந்தை பெரியார் குறித்த புத்தகங்களை படிக்க வேண்டும், குறிப்பாக “பெண் விடுதலை” என்ற புத்தகத்தை படிக்க வேண்டும். அவர் பெண்கள் முன்னேற்றத்திற்கு எந்த அளவிற்கு பாடுபட்டார் என்று உணர முடியும்,

அப்படிப்பட்ட தந்தை பெரியாரை தற்போது ஒரு ஒரு சிலர் கொச்சைப்படுத்தி விமர்சிக்கின்றனர், நான் சொல்கிறேன் தந்தை பெரியாரை வெல்லவும் முடியாது, வீழ்த்தவும் முடியாது,

பெண்கள் சமமாக மதிக்கப்படும் அனைத்து இடங்களிலும் பெண்களின் மனங்களில் தந்தை பெரியார் வாழ்கின்றார், எப்போதும் வாழ்வார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற மகளிர் அணி -மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. இவ்வாறு உரையாற்றினார். அப்போது துணை பொதுச் செயலாளர் கே.பொன்முடி, மாவட்ட பொருப்பாளர் பொன்.கவுதமசிகாமணி, எம்எல்ஏக்கள் லட்சுமணன், சிவா உட்பட பலர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top