Close
பிப்ரவரி 23, 2025 3:56 காலை

உத்திரமேரூர் அருகே அனுமதி இன்றி அரசு நிலத்தில் தேவாலயம் : இந்து முன்னணி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை..!

அனுமதியின்றி அரசு நிலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் தேவாலயம்

உத்திரமேரூர் அருகே அனுமதி இன்றி அரசு நிலத்தில் தேவாலயம் கட்டிட பணிகளை தடுத்து நிறுத்த கோரி அப்பகுதி மக்கள் மற்றும் இந்து முன்னணியின் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நிலையில், வட்டாட்சியர் தற்போது நிலையிலேயே பணிகள் இருக்க வேண்டுமென அறிவிப்பு கடிதம் அனுப்பி உள்ளார்..

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் கட்டியாம்பந்தல் கிராமத்தில் புதியதாக தேவாலயம் அமைக்கும் பணி ஜெபமணி மத்தேயு என்பவர் மேற்கொண்டு வருகிறார்.

இன்றைய கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீரம்யா மற்றும் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியருக்கு கிறிஸ்துவ வழிபாட்டு தலம் அனுமதி இன்றி அரசு நிலத்தில் கட்டப்பட்டு வருவதாகவும் உடனே அப்பணிகளை நிறுத்த கோரி மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து மனு அளித்தும் தேவாலய நிர்வாகம் பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில் இன்று திடீரென அக்கிராம பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முற்றுகையிட குவிந்தனர்.

இதனை அறிந்த காவல்துறை உடனடியாக வட்டாட்சியரை தொடர்பு கொண்டு இதுகுறித்து தகவல் தெரிவித்ததின் பேரில், வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் நிகழ்ச்சியில் உள்ளதால் சற்று கால தாமதம் ஏற்படும் என தெரிவித்த நிலையில் அனைவரும் காத்திருந்தனர்.

மாவட்ட பிற்படுத்த பட்டோர் நலத்துறை துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் தேன்மொழி அலுவலகம் வந்த நிலையில் அக்கிராம பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து தேவாலய நிர்வாகத்திற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது.

இதில் தேவாலயம் கட்டி வரும் சர்வே எண் 252/2 கிராம கணக்கில் நத்தம் என தாக்கல் ஆகி உள்ளதாகவும், அந்த இடத்தை கிரே ஆவணம் பெற்று கடந்த ஒரு ஆண்டாக சென்னையை சேர்ந்த ஜெபமணி மத்தேயு என்பவர் தேவாலயம் கட்டி வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

இங்கு கட்டிடம் கட்ட அக்கிராம பொதுமக்கள் சார்பாக ஆட்சியிர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோருடன் ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்த நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது எனவும் இது தொடர்பாக கிராமத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பிரச்சனை ஏற்படும் நிலை உள்ளதால் கிராமத்தில் தற்போது நிலையினையே ( Status quo) தொடர்ந்து கடைபிடிக்குமாறு தேவாலய நிர்வாகத்தினை தெரிவிக்கப்படுகிறது என வட்டாட்சியர் தேன்மொழி கடிதம் வாயிலாக தகவல் அனுப்பியுள்ளார்.

இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையிலும் தேவாலயத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கான வீடியோ ஆவணங்களையும் வட்டாட்சியரிடம் அளித்து தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top