Close
பிப்ரவரி 22, 2025 9:56 மணி

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சிறப்பு சட்டமியற்ற ஆர்ப்பாட்டம்..!

தமிழ்நாடு சுமப்பணியாளர்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் :

விழுப்புரத்தில் தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கையில் வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட சுமைபணி தொழிற்சங்க மாவட்டத்தலைவர் எம்.பழனி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநில பொருளாளர் பி.குமார், டாஸ்மாக் சங்க பொதுச்செயலாளர் ஆர்.கணபதி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கண்டு
சுமை பணி தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கருதி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், சேமநலநிதியாக இரண்டு சதவீதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் பி.அய்யப்பன், பி.ஏழுமலை,வி.பாஸ்கரன், என.மாயகிருஷ்ணன், எம்.சுரேஷ் ஆர்.முருகன் டி.அண்ணாமலை என்.ஐயனார், பி.மாரிமுத்து, கே.ராஜா, கே.பாபு, கே.நாகராஜன் எஸ்.மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top