Close
பிப்ரவரி 22, 2025 3:28 மணி

தனி நலவாரியம் அமைக்க கோரி சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் பார்க் ரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் சுமைதூக்கும் பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட உதவி தலைவர் .செங்கோடன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் வேலுசாமி பங்கேற்றுப் பேசினார்.

தமிழகத்தில், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சிறப்பு சட்டம் உருவாக்க வேண்டும். சரக்கு பரிவர்த்தனை மதிப்பில் 2 சதவீதம் தொழிலாளர் நிதியை உருவாக்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் உருவாக்க வேண்டும். இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.

மத்திய, மாநில அரசு குடோன், தனியார் குடோன், டாஸ்மாக் குடோன்களில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஃஎப், போனஸ், அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள், ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. சிஐடியு மாவட்ட உதவி செயலாளர் சிவராஜ் உள்பட சங்க திரளானவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top