மதுரை:
மதுரை காந்தி மியூசியத்திலிருந்து சங்கரன்கோவில் புத்தர் கோயிலுக்கு அமைதிக்கான நடை பயணத்தில் புத்த பிக்குகளுடன் சேர்ந்து புறப்பட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் பிகார், ஒடிஸா, அருணாசல பிரதேசம், டெல்லி உள்பட சில இடங்களில் உலக அமைதி புத்த கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, தென்னிந்தியாவில் தமிழகத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியில் வீரிருப்பு கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி இக்கோபுரம் கடந்த 25 ஆண்டுகளாக கட்டப்பட்டு தற்போது பணிகள் ஆனது முடிவடைந்துள்ளது. வரும் 21 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
2000 -ஆம் ஆண்டு புத்தர் கோயில் கட்டப்பட்டு, அதன் அருகே கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை தமுக்கம் மைதானம் அருகே அமைந்துள்ள காந்தியின் நினைவு அருங்காட்சியகத்திற்கு 18 நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள், மதுரை காந்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செய்தனர்.
தொடர்ந்து புத்த மத வழிபாட்டில் ஈடுபட்டு இறைவழிபாடு நடத்தி பேருந்தில் சென்று அங்கிருந்து நடைபெறமாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலில் புதிதாக 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட புத்த கோயிலுக்கு சென்று வழிபட உள்ளனர்.
இதில் ,கனடா, லண்டன், அமெரிக்கா, போலந்து, ஸ்ரீலங்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 18 நாடுகளைச் சேர்ந்த நாட்டவர்கள் பங்கேற்றனர். 50க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் இஸ்தானிஜி தலைமையில் இன்று காந்தி மியூசியம் வந்தனர்.அவர்களை காந்தி மியூசியம் செயலாளர் நந்தாராவ்,பொருளாளர் வழக்கறிஞர் செயலாளர் செந்தில்குமார்காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன் மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு உட்பட பலர் வரவேற்றனர்.
இது குறித்து, பேசிய புத்த பிக்கு லீலாவதி கூறுகையில், “உலகில் அமைதியை பரப்ப வேண்டும் என்பதற்காக இந்த நடை பயணத்தை மேற்கொள்கிறோம். இதில் 18 நாடுகளைச் சேர்ந்த புத்த மதத்தை பின்பற்றக் கூடியவர்கள் பங்கேற்றுள்ளன.
இன்றைய தினம் காந்தி அருங்காட்சியகத்தில் வழிபாடு நடத்தி நடை பயணமாக செல்ல இருக்கின்றனர்.
பல இடங்களில் சாலைகள் மோசமாக இருப்பதால், சாலைகள் நன்றாக உள்ள இடத்திலிருந்து நடை பயணமாக தென்காசி, சங்கரன்கோவில் அமையப்பெற்ற புத்த கோயிலுக்கு சென்று 17ஆம் தேதி வழிபாடு நடத்த உள்ளோம். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்”, என கேட்டுக் கொண்டார்.