Close
பிப்ரவரி 23, 2025 11:11 காலை

மானாம்பதி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு புதிய வகுப்பறைக் கட்டிடம் கட்ட பூமி பூஜை..!

உத்திரமேரூர் , மானம்பதி ஆகிய இரு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூபாய் 8.47 கோடி மதிப்பீட்டில் 36 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடங்களுக்கான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் துவக்கி வைத்தார்..

உத்திரமேரூர் , மானம்பதி ஆகிய இரு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூபாய் 8.47 கோடி மதிப்பீட்டில் 36 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடங்களுக்கான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் துவக்கி வைத்தார்..

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பில் அரசு துவக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை செயல்பட்டு அரசு திட்டங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

தற்போது கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கான கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானாம்பதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1971 மாணவர்களும், உத்திரமேரூர் அரசு மகளிர் பள்ளியில் 1200 மாணவிகளும் கல்வி பயின்று வரும் நிலையில் அவர்களுக்கான கூடுதல் வகுப்பு அறைகள் கட்ட கோரிக்கை எழுந்தது.

அதன் அடிப்படையில் மானாம்பதி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 2 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் 12 வகுப்பறைகளுக்கான கட்டிடங்களும், அதேபோல் உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 5.65 கோடி மதிப்பீட்டில் 24 வகுப்பறைகளும் கொண்ட புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கலந்து கொண்டு புதிய வகுப்பறைகளுக்கான கட்டிடப் பணியினை துவக்கி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

மேலும் பணிகள் குறித்து கேட்டறிந்து பணிகளை 12 மாதங்களுக்குள் நிறைவேற்றி மாணவர்களுக்கும் நலன் காக்க ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

ரூபாய் 8.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள இந்த வகுப்பறைகளால் மாணவர்களுக்கு மிகுந்த பயன் ஏற்படும் எனவும் ஆசிரியர்களும் மாணவிகளும் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூராட்சி தலைவர் சசிகுமார், தலைமை ஆசிரியைகள் ராஜீவீ, ராஜலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top