Close
பிப்ரவரி 23, 2025 11:03 காலை

கழிவறை கட்டி கொடுங்க எம்எல்ஏ சார் : ஆசிரியர்கள்,மாணவிகள் கோரிக்கை..!

எம்எல்ஏ சுந்தரிடம் கழிப்பறை கேட்கும் ஆசிரியைகள்

2000 மாணவியர் பயிலும் பள்ளியில் போதிய கழிவறை இல்லையே என ஆசிரியைகள் கோரிக்கை.

பல கோடியில் கட்டிடம் கட்டும் நிலையில் கழிப்பறைக்கு இடமில்லையா??

உடனடி அவர்களின் தேவைகளை நிறைவேற்ற எம்எல்ஏ அறிவுரை.. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நூற்றுக்கணக்கான அரசு மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

பள்ளிக்கல்வித்துறையின் தற்போதைய செயல்பாட்டால் அரசு பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்களை விட மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

ஒருபுறம் கட்டமைப்பு குறைவு, மற்றொருபுறம் மாணவியர்களின் இயற்கை உபாதைகளுக்கான இடம் இல்லாதது மிகவும் வருத்தத்தை அளித்து வருகிறது.

அவ்வகையில் மானாமதி அரசு பள்ளியில் வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் வெட்டவெளியில் பயின்று வரும் நிலையை போக்கும் வகையில் இன்று உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தனது சட்டமன்ற தொகுதிகளில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு ரூபாய் 8.47 கோடி மதிப்பில், கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை பணியினை துவக்கினார்.

பணி துவக்க வந்த எம் எல் ஏ விடம் ஆசிரியைகள் மாணவிகள் என பல தரப்பினரும் இரு பள்ளிகளிலும் கழிவறை வசதி முறையாக எங்களுக்கு இல்லை எனவும் இதனால் சிரமப்படுவதாக தொடர் புகார்கள் தெரிவித்தனர்.

அப்போது உடனிருந்து பொதுப்பணித்துறை பொறியாளர் இடம் புதிய கட்டிடங்கள் கட்டும் நிலையில் அதில் கழிவறைகள் இணைக்கப்படுவது இல்லையா என கேள்வி எழுப்பினர்.

அதுபோன்ற திட்டம் ஏதும் இல்லை எனவும் அதற்காக தனியாக கூடுதல் கழிவறை கட்டிடங்கள் கட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் ஆலோசித்து அதன் பின் உடனடியாக செயல்படுத்துவதாக தெரிவித்தார்.

இயற்கை உபாதைகளை முறையாக கடைபிடிக்காவிட்டால் இளம் பெண்களுக்கு அதிக நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கும் நிலையில் வரும் காலங்களில் கோடிக்கணக்கில் கட்டிடம் கட்டும்போது அதில் கழிவறை திட்டத்தையும் இணைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top