Close
பிப்ரவரி 23, 2025 11:24 காலை

நாளை முதல் பழைய இடத்திலேயே காஞ்சிபுரம் காய்கறி சந்தை : புதிய பொலிவுடன்..!

காஞ்சிபுரம் காய்கறி சந்தை

நாளை முதல் காஞ்சிபுரம் மாநகரில் பழைய இடத்திலேயே புதிய பொலிவுடன் செயல்பட துவங்க உள்ளது காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை..

அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என வியாபாரிகள் பெருமிதம்..

காஞ்சிபுரம் காந்தி சாலையை ஒட்டி அமைந்துள்ளது நூற்றாண்டுகள் கடந்த ராஜாஜி காய்கறி சந்தை. இங்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து விளைவிக்கப்படும் காய்கறிகள் பொதுமக்களுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படும்.

இந்நிலையில் இந்த ராஜாஜி காய்கறி சந்தையில் மழை காலங்களில் காய்கறி கழிவுகள் மற்றும் பொதுமக்களுக்கு செல்ல இயலாத நிலை இருந்து வந்ததைக் கொண்டு காஞ்சிபுரம் மாநகராட்சி தமிழக அரசுக்கு புதிய காய்கறி சந்தை வளாகம் கட்ட அனுமதி கோரி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் அடிப்படையில் ரூபாய் 7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொதுமக்கள் மற்றும் காய்கறி வியாபாரிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உடன் அமைக்கப்பட்டது.

இந்த பணி இடைப்பட்ட காலத்தில் ஓரிக்கை பகுதியில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த தற்காலிக காய்கறி சந்தையை நகரின் பழைய இடத்திலேயே இடம் மாற்றம் செய்ய வியாபாரிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நாளை காலை முதல் வழக்கம்போல் காய்கறி சந்தைகள் துவங்கும் என மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வியாபாரிகள் கடைகளை சுத்தம் செய்யும் பணிகளை துவக்கி வருகின்றனர்.

இது குறித்து வியாபாரி சங்க துணை செயலாளர் வெங்கடேசன் கூறுகையில், வியாபாரிகள் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், நகரின் மையப்பகுதியில் மீண்டும் வியாபாரம் தொடங்குவதில் மகிழ்ச்சி அளிப்பதாகவும், நகரின் மையப் பகுதியில் செயல்பட உள்ளதால் வியாபாரிகளுக்கு கூடுதல் வியாபாரங்கள் நடக்கும் என்பதும் மகிழ்ச்சியே என தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top