மதுரை.
மாநகராட்சி “பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் உபகரணங்கள் தொகுப்பு” தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
மதுரை மாநகராட்சி தத்தனேரி திரு.வி.க.மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவி களுக்கு ஹனிவெல் நிறுவனத்தின் சார்பில் அறிவியல் உபகரணங்கள் தொகுப்புகளை (Scientific Kit) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்
இந்நிகழ்வில், மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் சித்ரா விஜயன், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 64 பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகள், பாடப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், பள்ளி சீருடைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், கழிப்பறைகள் கட்டுதல் மற்றும் நூலகம் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.22 தத்தனேரி பகுதியில் உள்ள வி.க.மாநகராட்சி மேனிலைப்பள்ளியில், ஹனிவெல் நிறுவனத்தின் சார்பில் 6 ஆம் வகுப்பு பயிலும் 100 மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் உபகரணங்கள் தொகுப்பினை, அமைச்சர் வழங்கினார்.
தொடர்ந்து, மண்டலம் 3 வார்டு எண்.56 கரிமேடு மார்க்கெட் அருகில் மத்திய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, கல்விக்குழுத்தலைவர் ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன்,
உதவி செயற்பொறியாளர் முத்து. சுகாதார ஆய்வாளர் கவிதா, மாமன்ற உறுப்பினர்கள் மகாலெட்சுமி, ஜென்னியம்மாள் ஹனிவெல் இயக்குநர் கிருஷ்ணா, தலைமை ஆசிரியர் அன்புச்செல்வன், மாநகராட்சி அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.