Close
ஏப்ரல் 15, 2025 10:34 மணி

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம்..!

புதுச்சத்திரத்தில் நடைபெற்ற, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான, நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாமில், நாமக்கல் கலெக்டர் உமா பேசினார்.

நாமக்கல் :

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு , நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார்.

புதுச்சத்திரம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுமக்களிடையே நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் 100 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்க பயிற்சிமுகாம்கள் நடத்தப்படஉள்ளது.

முதற்கட்டமாக பயிற்சி முகாம்கள் நடத்துவதற்காக, மகளிர் திட்ட அலுவலர் மற்றும் பிடிஒக்களைக் கொண்டு ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனைடிப்படையில்இரு தன்னார்வ நுகர்வோர்களுக்கு, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

தற்போது அந்த பயிற்சியாளர்கள் மூலம் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும், தலா 100 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கபடுகிறது. தொடர்ந்து, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பயிற்சி முகாம்கள் நடத்தப்படஉள்ளது.

மகளிர் சுய உதவிக்குழுவினர் இப்பயிற்சி வகுப்புகளை பயன்படுத்திக் கொண்டு, பொதுமக்களிடையே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top