அரசினர் அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் & மண்டல புற்றுநோய் மையத்தில், பன்னிரண்டாவது அண்ணா நினைவு புற்று நோயியல் தொடர் கருத்தரங்கு நடைபெற்றது.
பெருகுடல் புற்றுநோயை மையமாகக் கொண்டு நடைபெற்ற கருத்தரங்கில், நான்காம் நிலை பெருகுடல் புற்றுநோய்க்கு வழங்கப்படும் வேதி சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மருத்துவமனையின் இயக்குநர் மரு. சரவணன் தலைமை தாங்கி வரவேற்புரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சியில் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு. திருமதி ரேவதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை முன்னாள் பேராசிரியரும், முன்னாள் கதிரியக்கவியல் பேராசிரியருமான மரு. தயாளன் குப்புசாமி நிகழ்ச்சியில் நன்றி கூறி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை புற்றுநோய் உயர் அறுவை சிகிச்சை துறை இணை பேராசிரியரும் , இந்நிறுவனத்தின் புற்று நோய் கல்வியியல் ஒருங்கிணைப்பாளருமான மரு. த. தே. பாலமுருகன் ஏற்பாடு செய்திருந்தார்.
அரசினர் அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனையி ன் மருத்துவ புற்று நோயியல் உதவி பேராசிரியர் மரு. அஷ்வின் ஜெபர்சன் பால் மற்றும் சென்னை ரேலா மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்று நோயியல் சிகிச்சை நிபுணர் மரு.பிரகலாத் யாத்திரிராஜ், ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நான்காம் நிலை புற்றுநோய் ஆனாலும் அதற்கான உரிய சிகிச்சை முறைகளை உரிய நேரத்தில் அறிவியல் பூர்வமாக , புற்று நோயியல் உயர் சிறப்பு வல்லுநர் குழு மூலமாக அளிக்க ப்பெரும் பொழுது நோயரின் வாழ்நாள் நீட்டிப்பு மற்றும் வாழ்வியல் திறன் மேம்பாடு சாத்தியம் என்பதை எடுத்து உரைத்தனர்
இம்மருதுவமணியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி, பணி விடுவிக்கப்பட உள்ள மரு. அஷ்வின் ஜெபர்சன் பால் அவர்களுக்கு நன்றி பாராட்டப்பெற்றது.
இந்த நிகழ்வில் நேரடியாகவும், காணொளி வாயிலாகவும் சுமார் 100 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். நிலைய மருத்துவ அதிகாரி மரு. சிவகாமி நன்றியுரை ஆற்றினார்.