Close
பிப்ரவரி 21, 2025 10:10 மணி

வாலாஜாபாத் அடுத்த சேர்காடு மேம்பாலம் அருகே அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு..!

பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு -கோப்பு படம்

வாலாஜாபாத் அடுத்த சேர்காடு மேம்பாலம் அருகே அரசு பேருந்து மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.. காயமடைந்த மற்றொருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வாலாஜாபாத் காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் ராஜ வீதியில் பழனி என்பவர் மரகட்டை வியாபாரம் செய்து வருகிறார் . அவருக்கு உதவியாக ஊத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த பரதம் என்பவர் வேலை செய்து வருகிறார் .

இந்நிலையில் பழனி மற்றும் வரதன் ஆகிய இருவரும் அவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் வாலாஜாபாத்தில் இருந்து புறப்பட்டு ஒரகடம் செல்லு போது சாலையோர உள்ள டிபன் கடையில் டிபன் வாங்கிக் கொண்டு சேர்க்காடு மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தை வலது பக்கமாக திரும்பி வாலாஜாபாத் மார்க்கமாக செல்ல முயன்றனர்.

அப்போது சென்னையில் இருந்து வாலாஜாபாத் நோக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுனர் அதிவேகமாகவும்,அஜாக்கிரதையாக ஓட்டி வந்து இருசக்கர வாகனத்தில் மீது மோதியுள்ளார்.

இதனால் நிலைத்தடுமாறி பின்னால் அமர்ந்து கொண்டிருந்த வரதன், கீழே விழுந்ததில் வலது கை, பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே இறந்து விட்டார்.

வாகனத்தை ஓட்டிச் சென்ற பழனி என்பவருக்கு பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இது சம்பந்தமாக சம்ப இடத்தில் வாலாஜாபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top