நாமக்கல் :
நாமக்கல்லில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழாவை கலெக்டர் துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்காக மொத்தம் 27 ஹாஸ்டல்கள் செயல்பட்டு வருகினறன.
இந்த ஹாஸ்டல்களில் தஙகிப் படிக்கும் மாணவ மாணவிகளுக்கான கலைத்திருவிழா, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி என்னைக் கவர்ந்த நூல் என்ற தலைப்பிலும்,
கல்லூரிகளுக்கு இந்திய அரசியலைப்புச் சட்டம் 75 வது ஆண்டு என்ற தலைப்பிலும், கட்டுரைப்போட்டிகள் பள்ளிகளுக்கு தமிழர் பண்பாடு என்ற தலைப்பிலும், கல்லூரிகளுக்கு பேரிடர் மேலாண்மை என்ற தலைப்பிலும் ;நடைபெற்றது. மேலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்றது.
தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட மாணவியர் விளையாட்டு விடுதியில் உள்ள 33 கால்பந்து வீராங்கனைகள், 25 கபாடி வீரங்கனைகள் என மொத்தம் 58 வீராங்கனைகளுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள உடைகள் மற்றும் உபகரனங்களை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.