விழுப்புரம் :
விழுப்புரத்தில் உள்ள சட்டக் கல்லூரியிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும் ,சரி செய்ய மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்களிடமிருந்து கோரிக்கை எழுந்து வருகிறது.
விழுப்புரத்தில் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் அருகே அரசு சட்டக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர், மேலும் 50- கற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அரசு சட்டக் கல்லூரி பின்புறம் என்.ஜி.ஜி.ஓ, கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர், அதன் பின்புறம் உள்ள சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்திலிருந்து சாலாமேடு, இ.பி காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர், மேலும் அப்பகுதியில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மாணவிகள் உட்பட 500- க்கும் மேற்பட்டோர் இந்த சாலை வழியாக வந்து சென்று கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த சாலையில் அரசு சட்டக் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலைகளில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது, இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் தினம்தோறும் இந்த சாலைகள் வழியாக 500க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு மர்ம நோய்கள் ஏற்படும் அபாயத்துடன் கூடிய அச்சத்தில் இந்த சாலை வழியாக கடந்து வருகின்றனர்.
உடனடியாக இங்கு உள்ள கழிவுநரை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் நகராட்சிக்கு அறிவுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.